இந்தியா

ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: நவ்ஜோத் சித்துவின் பேச்சுக்கு பாஜ எதிர்வினை 

DIN

புது தில்லி:  தமிழர்கள் குறித்த நவ்ஜோத் சித்துவின்பேச்சுக்காக, ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சருமான நவ்ஜோத் சித்து பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்நாட்டு ராணுவத் தளபதியுடன் அவர் சிரித்து கைகுலுக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்வு ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது பாகிஸ்தான் மீது ஈர்ப்பு ஏன் என்பது குறித்து அவர் பேசியதாவது:

நான் தமிழ்நாட்டுக்கு சென்றால் அங்குள்ள மொழி புரியாது. ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகள் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது. அங்குள்ள உணவு பிடிக்காது என்று சொல்வதற்கு இல்லை. இட்லி எனக்கு பிடித்த உணவு. இருந்தாலும் தொடர்ந்து அதை நீண்ட நாட்களுக்கு சாப்பிட முடியாது. அதுபோல் அவர்களின் கலாசாரமும் முற்றிலும் வேறுவிதமானது.

ஆனால் அதேசமயம் நான் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும்போது இந்த சிரமம் எதுவும் இல்லை. மொழி உள்பட அங்குள்ள அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 

இவ்வாறு அவர் பேசியிருந்தார். 

அவரது இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக,  பா.ஜ.க. மேலிடத் தலைவர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

உங்கள் கட்சி (காங்கிரஸ்) பாகிஸ்தானை நேசிப்பதும், உங்கள் கட்சியினர் பாகிஸ்தானின் புகழ்பாடி வருவதும் எங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டை பற்றி சித்து தெரிவித்த கருத்துக்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். 

இதற்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நவ்ஜோத் சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT