இந்தியா

அதிகாரப்பூர்வமாக 'பிரயாக்ராஜ்' என பெயர் மாறியது அலகாபாத் 

உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான அலகாபாத்தின் பெயர் பிரயாக்ராஜ் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ANI

லக்னௌ:  உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான அலகாபாத்தின்  பெயர் பிரயாக்ராஜ் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

உலகப் புகழ் பெற்ற கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ல்  தொடங்க உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று துறவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். 

அவர்கள் கோரிக்கையினை ஏற்று பெயர் மாற்றப்பட உள்ளதாக இரு நாட்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகியது 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான அலகாபாத்தின்  பெயர் பிரயாக்ராஜ் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மாநில சுகாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத சிங் கூறியதாவது:

விரைவில் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவினை முன்னிட்டு அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று துறவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். 

கும்பமேளா விழாதொடர்பாக இரு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் கூட முதல்வர் யோகி ஆதித்யநாத்தும்  இதையே  வலியுறுத்தினார். எனவே இது செவ்வாய்க்கிழமை துவங்கி உடனடியாக  நடைமுறைக்கு வருகிறது 

சுமார் 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே அலகாபாத் நகரானது பிரயாக்ராஜ் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தது. பிரயாக்ராஜ் என்றால் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் என்று பொருளாகும், ரிக் வேதம் உள்ளிட்ட பல்வேறு இந்து மத நூல்களிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர தெரிவித்தார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT