இந்தியா

இனி பாஜக அமைச்சர்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம்: ராகுல் காந்தி கடும் தாக்கு 

இனி பாஜக அமைச்சர்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனமா செய்துள்ளார். 

DIN

போபால்: இனி பாஜக அமைச்சர்களிடம் இருந்து பெண் குழந்தைகளைக் காப்போம் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனமா செய்துள்ளார். 

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வருகிறார். தனது பிரசாரத்தில் அவர் மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். செவ்வாயன்று ஒரு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவது தொடர்பாக அவர் பேசியதாவது:

மோடியின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடியோ அந்த அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதுகுறித்து எதுவும் கூறாமல் மவுனமாக இருக்கிறார். 

இதேபோல உ.பி. பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த  சம்பவத்திலும் பிரதமர் மோடி மவுனம்தான் காத்தார். மாநில முதல்வரும் வாய் மூடி இருந்தார். இருவரும் அது குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் கோஷமான 'பெண் குழந்தைகளை காப்போம், கல்வி கற்பிப்போம்' என்பதை இனி 'பா.ஜனதா அமைச்சர்களிடம் இருந்தும், எம்எல்ஏக்களிடம் இருந்தும் பெண் குழந்தைகளைக் காப்போம்' என்று மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. 

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT