இந்தியா

எரிபொருள் விலையில் அரசு தலையிடாது

DIN


பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையிடாது; சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, அண்மையில் லிட்டருக்கு தலா ரூ.2.50 -ஐ குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் பாஜக ஆளும் பல மாநிலங்களும் தங்கள் வரியில் தலா ரூ.2.50-ஐ குறைத்தன. 
இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைந்தது. இந்நிலையில், அவற்றின் விலை மீண்டும் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு மீண்டும் இதே போன்ற விலைக் குறைப்பு நடவடிக்கையை மீண்டும் மேற்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது. 
இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பிரதான் இது தொடர்பாக கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். இதில் அரசின் தலையீடு எதுவும் இருக்காது. பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 வரை மத்திய அரசு அண்மையில் குறைத்தது. இது தொடர்பான மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல மாநில அரசுகளும் விலையை மேலும் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுத்தன. அதே நேரத்தில் தில்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள் விலையைக் குறைக்கவில்லை. அது ஏன் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம்தான் கேட்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT