இந்தியா

டிசம்பரில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்?

DIN


டிசம்பர் மாதம் 2-ஆவது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
அடுத்த இரண்டு வாரங்களில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூடி குளிர்காலக் கூட்டத்தொடர் தேதியை முடிவு செய்யவுள்ளது. எத்தனை நாள்கள் கூட்டத் தொடரை நடத்தலாம் என்பதை அந்தக் குழு ஆலோசிக்கவுள்ளது. ஜனவரி 2-ஆவது வாரம் வரை கூட்டத் தொடர் நடத்தலாம் என முடிவு செய்ய வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதாவை மாநிலங்களையில் நிறைவேற்றுவதையும், தேசிய மருத்துவக் கவுன்சிலை கலைப்பதற்கான அவசரச் சட்டத்தை கொண்டுவருவதையும் மத்திய அரசு பிரதானமாக கொண்டு இந்தக் கூட்டத்தொடரில் செயல்படும் எனத் தெரிகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது.
மழைக் காலக் கூட்டத் தொடரைப் போல், குளிர்கால கூட்டத் தொடரையும் சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த வேண்டும் என்று முனைப்பில் மத்திய அரசு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடர் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT