இந்தியா

ஐயப்ப பக்தர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள்: கேரள அமைச்சர் 'திடுக்' குற்றச்சாட்டு

DIN

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் என கேரள அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் 'திடுக்' குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைவருக்கும் பொருந்தும். எனவே அதை மீறி யாரும் நடக்கக் கூடாது. எனவே அரசு அதை பின்பற்றவும், அமல்படுத்தவும் செய்கிறது. நிலக்கல்லில் ஏற்பட்ட வன்முறையில் ஊடகத்தினர் 10 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஐயப்ப பக்தர்கள் மற்றும் 15 போலீஸார் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

இதர மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர். 10 கேரள அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவை அத்தனைக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் காரணம். 

ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் தான் வனங்களில் பதுங்கியிருந்து ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர் என்று குற்றம்சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT