இந்தியா

கேரள போலீஸ் என் மீது வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்துள்ளது: ராகுல் ஈஸ்வர்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணியளவில் முதல்முறையாக திறக்கப்பட்டது.

இதனிடையே, சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும் அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இந்நிலையில், நிலக்கல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் என்பவர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பம்பா காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்.

ஆனால், தான் எந்த பெண் மீதும் தாக்குதல் நடத்தவில்லை எனவும், அப்பகுதியில் இருந்து மாற்று திசையில் சென்றுகொண்டிருந்த தன் மீது கேரள போலீஸார் வேண்டுமென்றே பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்துள்ளதாக ராகுல் ஈஸ்வர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT