இந்தியா

சபரிமலை சட்டம், ஒழுங்கு சீர்கேடுக்கு இடதுசாரி அரசு தான் காரணம்: பாஜக தாக்கு

DIN

நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு இடதுசாரி அரசு தான் காரணம் என கேரள பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட சட்டம், ஒழுங்கு சீர்கேடுக்கு இடதுசாரி அரசு தான் காரணம். பெண்கள் மீதான தாக்குதல் சம்பவம் யாரும் எதிர்பார்க்காதது. இதற்கும் பாஜக-வுக்கும் சம்பந்தமில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தில் எந்தவொரு பாஜக தொண்டரும் ஈடுபடவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவிக்கிறது என கேரள பாஜக மூத்த தலைவர் எம்.எஸ்.குமார் தெரிவித்தார்.

இதனிடையே, சபரிமலை கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணியளவில் முதல்முறையாக திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT