இந்தியா

சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் 

சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரராகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

DIN

பம்பை: சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காகத் புதனன்று திறக்கப்படுகிறது.  ஐந்து நாட்களுக்கு பிறகு 22-ம் தேதி நடை அடைக்கப்படுகிறது. 

சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் வரும் வாகனங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள்  சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் பம்பை அடிவார முகாம் பகுதியில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நிலக்கல் பகுதியில் ஆங்கில ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சரிதா மற்றும் பூஜா ஆகியோர் போராட்டம் பற்றிய செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூஜா வந்திருந்த வாகனத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு அடித்து நொறுக்கினர். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.   அவருடன் வந்திருந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் குழுவினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

அதேபோல் பேருந்து ஒன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சரிதா என்ற மற்றொரு ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றைச் சேர்ந்த சரிதா என்று பத்திரிகையாளர் பேருந்திலிருந்து கீழே இறக்கப்பட்டு தாக்கப்பட்டார். 

போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு பலத்த பதற்றம் நிலவுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

கர்நாடகத்தில் மிதமான நிலநடுக்கம்!

கனவுகளுக்காக போராடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கதை | Women Cricket World Cup

SCROLL FOR NEXT