இந்தியா

பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க் மீது உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் புகார்

DIN

உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உட்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன், பேஸ்புக் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சான்ட்பெர்க் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கிறிஸ் கோக்ஸ் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் சமூக வலைதளம் ஒரு செயலியை நடத்துகிறது. அதில், எந்த அனுமதியும் பெறாமல் தேசிய சின்னங்களை பயன்படுத்த அது அனுமதிக்கிறது என்று மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், விளம்பரத்துக்காக இது போன்ற சின்னங்களை பயன்படுத்தி நிறைய சம்பாதிக்கின்றனர். இந்த குற்றத்துக்காக புகார் அளித்துள்ள நால்வருக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் அதற்கான புகைகப்பட ஆதாரத்தையும் அவர் சமர்பித்துள்ளார். இது தனது தேசியப் பெருமையைும் உணர்வையும் பாதிப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.  

இதனை புதன்கிழமை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் ஆனந்த் பிரகாஷ் சிங் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT