இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
புது தில்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
இருநாட்டு நல்லுறவு மற்றும் இலங்கையில் இந்தியாவின் சார்பில் நடைபெறும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் ரணில் விக்ரமசிங்கேவை ஹைதராபாத் இல்லத்தில் மோடி சந்தித்துப் பேசினார்.
ஹைதராபாத் இல்லத்துக்கு வந்த ரணில் விக்ரமசிங்கேவை வரவேற்ற மோடி, எங்கள் இதயத்தில் இலங்கைக்கு என்றுமே ஒரு சிறப்பான இடம் இருக்கும் என்று கூறினார்.