இந்தியா

டிட்லி புயல்: இடைக்கால நிவாரணமாக ரூ.1,200 கோடி கோருகிறது ஆந்திரம்

DIN


ஆந்திர மாநிலத்தை சமீபத்தில் தாக்கிய டிட்லி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவும், மாநிலத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிவாரணமாக ரூ.1,200 கோடி வழங்கவும் வேண்டுமென அந்த மாநில அரசு மத்திய அரசிடம் திங்கள்கிழமை கோரியுள்ளது.
டிட்லி புயல் பாதிப்பு தொடர்பாக ஆந்திர பிரதேச நிவாரணப் பணிகள் ஆணையர் வரப்பிரசாத், உறைவிட ஆணையர் பிரவீண் பிரகாஷ் ஆகியோர், அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹாவிடம் திங்கள்கிழமை எடுத்துரைத்தனர்.
அப்போது, டிட்லி புயலால் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் உள்ள 1,802 கிராமங்களில் பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு மிகக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ.3,435.29 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, டிட்லி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். அத்துடன் இடைக்கால நிவாரணமாக ரூ.1,200 கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், புயல் சேதத்தின் மதிப்பை கணக்கிட குழு ஒன்றை ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT