இந்தியா

லஞ்சப் புகார்:சிபிஐ  துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை 7 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி  

லஞ்சப் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிபிஐ  துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை 7 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

DIN

புது தில்லி: லஞ்சப் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை 7 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிபிஐ சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவில் சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் இடம்பெற்றிருந்தார். மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதனிடையே, மொயின் குரேஷியின் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த இடைத் தரகர் மனோஜ் பிரசாத் என்பவரை சிபிஐ கைது செய்து விசாரித்தது. அப்போது அவர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிப்பதற்கு அஸ்தானாவுக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில், சனாவை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா, தேவேந்தர் குமார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. முன்னதாக, சனாவை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் அஸ்தானா கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார். தற்போது அதே லஞ்ச குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை சிபிஐ திங்கள்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளது.  

இந்நிலையில் லஞ்சப் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை 7 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

முதல் கட்ட விசாரணைக்கு பின்னர்  அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பான சி.பி.ஐ. மனுவை நீதிபதி சந்தோஷ் சினேகி மான் தேவேந்தர் குமாரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT