இந்தியா

இது இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி    

DIN

புது தில்லி: இது இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேட்டியளித்துள்ளார்.    

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான பதினெட்டு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் எடுத்த முடிவில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் எடுத்த முடிவில்  தவறு இல்லை என்றும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சட்டப்படியானதே என்றும் இந்த வழக்கில் முன்றாவது நீதிபதியாகி நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார். 

இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இது இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பதினெட்டு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. இதன்மூலம் பதினெட்டு தொகுதிகள் காலியாகி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இவ்வாறு தொகுதிகள் காலியாக இருப்பது அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் விதி. 

இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. யாரும் மேல்முறையீடு செய்யவில்லை என்று தெரிய வந்து, இதுதான் இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

புதிய மக்களவையில் முஸ்லிம்கள் எத்தனை பேர்?

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: பாஜக தொண்டர் கொலை!

‘மின்னும் பேரொளி’ சான்யா மல்ஹோத்ரா...!

SCROLL FOR NEXT