இந்தியா

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இணைந்தனர் 

முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இணைந்தனர்.

DIN

திருவனந்தபுரம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இணைந்தனர்.

கடந்த 2003 முதல் 2009 வரை இஸ்ரோ தலைவராக இருந்த மாதவன் நாயர், திருவனந்தபுரம் ஹோட்டல் தாஜ் விவாந்தாவில் நேற்று சனிக்கிழமை இரவு (அக்.27) நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். 

மேலும், திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் ஜி.ராமன் நாயர், மகளிர் ஆணையக் குழு முன்னாள் தலைவர் பிரமிளா தேவி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கர்ணாகுளம் மாவட்ட துணைத்தலைவர் திவாகரன் நாயர், மலங்காரா தேவாலயத்தின் தாமஸ் ஜான் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்.

கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்துவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நெருப்புடன் விளையாட நினைத்தால் கடுமையான விளைவுகளை முதல்வர் பினராயி விஜயன் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார்.

கேரள மாநிலம், கண்ணூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அமித் ஷா, கேரளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐயப்ப பக்தர்களை ஒடுக்குவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடும் பக்தர்கள் மீது வன்மத்தை காட்டக் கூடாது.

ஹிந்து பாரம்பரியத்தையும், சபரிமலை கோயிலின் புகழையும் கேரள அரசு அழிக்க நினைக்கிறது. அதை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது. பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்தால், பினராயி விஜயன் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அந்த அரசை ஆட்சியைவிட்டு அகற்றவும் பாஜக தயங்காது என்றம் பக்தர்களுடன் பாஜக துணை நிறுகும் என்று தெரிவித்தார். 

சபாரிமலை பிரச்னையில் பாஜக எடுத்த நிலைப்பாடு சரியானது என்றும் சபரிமலை விவகாரத்தில் பாஜக உடன் நிற்க வேண்டும் என்று ஜி.ராமன் நாயர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT