இந்தியா

குரங்குத் தொல்லையில் இருந்து தப்பிக்க.. உத்தரபிரதேச முதல்வரின் 'ஆஹா' யோசனை

உத்தரபிரதேசத்தின் மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் நிலவி வரும் குரங்குகள் தொல்லைக்கு அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் வித்தியாசமான யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

DIN

லக்னௌ: உத்தரபிரதேசத்தின் மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் நிலவி வரும் குரங்குகள் தொல்லைக்கு அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் வித்தியாசமான யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிதிகளில் உள்ள குரங்குகள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து வருகின்றது. இதன் காரணமாக அங்கு ஒரு சில விபத்துகள் நடப்பதும் உண்டு.

இந்நிலையில் மதுரா மற்றும் பிருந்தாவன் பகுதிகளில் நிலவி வரும் குரங்குகள் தொல்லைக்கு அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் வித்தியாசமான யோசனை ஒன்றைத் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் பிருந்தாவன் சென்று இருந்தார். அங்கு அரசு சார்பில் ரூபாய் 350 கோடிக்கான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது மதுராவாசிகள் அவரிடம் அங்கு நிலவி வரும் குரங்குத் தொல்லை தொடர்பாக புகார் அளித்தனர்.

அதற்கு யோகி ஆதித்யநாத் அவர்களிடம், 'ஹனுமரை தினமும் வணங்கி, ஹனுமான் சாலிஸா மந்திரத்தை ஓதுங்கள்; குரங்குகள் உங்களுக்கு எப்போதுமே தொல்லை தராது' என்று தெரிவித்தார்.

அப்போது அவர் தாம் மடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலிலுக்கு வரும் குரங்குகள் அவரது மடியில் அமர்ந்து கொடுப்பதை உண்டு விட்டு சென்று விடும் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலப்பு இணைகளுக்கு தங்கம், வெண்கலப் பதக்கங்கள்

ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

டை பிரேக்கரில் அர்ஜுன் எரிகைசி

எடப்பாடி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழப்பு

சங்ககிரியில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT