ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியருக்கு ரூ.23 கோடி லாட்டரி பரிசு
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசாக கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து கலீஜ் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், இந்தியர் ஜார்ஜ் மாத்யூவுக்கு, பிக் டிக்கெட் அபுதாபியில் முதல் பரிசு (12 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.23 கோடி)) கிடைத்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் 6 இந்தியர்களுக்கும் அதே லாட்டரியில் பரிசுகள் கிடைத்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் பலருக்கு அண்மைக்காலமாக தொடர்ந்து லாட்டரி பரிசுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. அந்நாட்டில் வாழும் கேரளத்தைச் சேர்ந்த தாஜோ மாத்யூவுக்கு கடந்த ஜூலை மாதத்தில் முதல் பரிசு கிடைத்தது. அதற்கு முன்னதாக, துபையில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த டிரைவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் பரிசு கிடைத்தது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கும் முதல் பரிசு கிடைத்தது.