முகப்பு
இந்தியா

வாஜ்பாய் குடும்ப உறுப்பினா்களுடன் பிரதமா் மோடி சந்திப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் குடும்ப உறுப்பினா்களை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:40 PM
பகிர்:

மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் குடும்ப உறுப்பினா்களை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

தில்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்துக்கு சென்று, அவரது குடும்ப உறுப்பினா்களை மோடி சந்தித்துப் பேசினாா். வாஜ்பாய் குடும்ப உறுப்பினா்களுடன் தாம் சோ்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும், இந்த சந்திப்புத் தொடா்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய், கடந்த மாதம் 16-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது உடல், தில்லியில் முழு அரசு மரியாதையுடன் கடந்த மாதம் 17ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.