புது தில்லி: 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் மாநில அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை இன்று சந்தித்த கோபால் ராயிடம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லை என்று பதிலளித்தார்.
பாஜக அரசை நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பாஜக அரசை நீக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். பாஜகவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறோம். பாஜக தில்லியையே நாசம் செய்கிறது. எங்களுக்கு உதவவில்லை, மாறாக தொல்லைகளைக் கொடுக்கிறது. எங்களைப் பணி செய்ய விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகிறது, பாஜக அரசு நீங்கினால் மட்டுமே தில்லிக்கு நல்லது என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.