இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயர் பரிந்துரை 

ANI

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. நீதித்துறையின் மரபுப்படி தற்போதைய தலைமை நீதிபதி தனக்கு அடுத்து பதவிக்கு வருபவரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும்.

அதன்படி உச்ச நீதிமன்றத்தின் அடுத்த  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அலுவலகம் இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் இறுதி செய்யப்படும்.

1954 ஆம் ஆண்டு பிறந்த கோகாய் 28.02.2001 அன்று கௌஹாத்தி உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 23.04.2012 ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தேர்தெடுக்கப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக விளங்கப் போகும் அவர், அக்டோபர் 3-ஆம் தேதி பதவியேற்க வாய்ப்பு உள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT