ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினம் புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சுட்டுரை பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது,
"ஆசரியர் தினத்தன்று டாக்டர். ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துகிறேன். அதேசமயம் நாட்டின் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நமது தேசத்தை கட்டமைப்பதற்கு சிறந்த ஆசிரியர்கள் தொடர்ந்து உதவிகளை வழங்கி, வழிநடத்த வேண்டும். மேலும், அவர்கள் உலக அமைதி, நல்லறிவு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கும் உதவ வேண்டும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.