இந்தியா

அவர் ஒரு பாலியல் தொழிலாளி: கன்னியாஸ்திரி வன்கொடுமை வழக்கில் கேரள எம்.எல்.ஏவின்  சர்ச்சைப் பேச்சு   

கேரளாவில் கன்னியாஸ்திரி வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்று கேரள சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையினை உண்டாக்கி இருக்கிறது.

DIN

திருவனந்தபுரம்: கேரளாவில் கன்னியாஸ்திரி வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்று கேரள சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையினை உண்டாக்கி இருக்கிறது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பாதிரியார் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் ஜலந்தர் சென்ற கேரள போலீசார், குறிப்பிட்ட பிஷப் ஃப்ராங்கோ  மூலக்கல்லிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் குறிப்பிட்ட பிஷப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமையன்று திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்று கேரள சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையினை உண்டாக்கி இருக்கிறது.

கேரள மாநிலத்தின் பூஜார் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏவாக இருப்பவர் ஜார்ஜ். இவர் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்த போது, இவ்வழக்கு தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

அந்த கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். 12 முறை வன்கொடுமை செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். முதல் முறை வன்கொடுமை செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT