இந்தியா

தெலங்கானா பேருந்து விபத்து: உயிரிழப்பு 52-ஆக அதிகரிப்பு

DIN

தெலங்கானா மாநிலத்தின் ஜகிதியால் மாவட்டத்தில் உள்ள கொண்டாகட்டு பகுதியில் அமைந்துள்ள மலைப்பாதையில் அம்மாநில அரசுப் பேருந்து செவ்வாய்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில், விபத்து காரணமாக இப்பேருந்தில் பயணம் செய்தவர்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை அறிவித்தார். 

மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தெலங்கானா விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, இப்பேருந்து விபத்தின் கோரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை கண்டு மனம் வேதனை அடைகிறது. அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் பூரண உடல்நலன் பெற வேண்டுகிறேன் என்று தெரிவித்தார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT