இந்தியா

சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுத்தையின் சிறுநீர்

ENS


2016ம் ஆண்டு எல்லையில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ஈடுபட வெறும் ஆயுதங்களை மட்டும் அல்ல, நாய்களின் மோப்ப சக்தியில் இருந்து தப்பிக்க சிறுத்தையின் சிறுநீரையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

அதாவது, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அமைந்திருக்கும் கிராமத்துக்குள் இந்திய ராணுவத்தினர் நுழையும் போது அங்கே இருக்கும் நாய்கள் குரைத்து மக்களை எழுப்பிவிட வாய்ப்பு அதிகம். அதே சமயம் நாய்களுக்கு சிறுத்தைகள் என்றால் பயம் என்று அறிந்திருக்கிறோம். எனவே, ஜர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் சிறுத்தையின் சிறுநீரையும் எடுத்துச் சென்றார்கள். அந்த வாசனையால், நாய்கள் ராணுவ வீரர்கள் பக்கமே வரவில்லை. சிறுத்தை என அஞ்சி அது அது இருந்த இடத்திலேயே பதுங்கிக் கொண்டது என்று ராணுவ அதிகாரி நிம்போர்கர் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 28-29ம் தேதிகளில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இருந்த 7 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT