இந்தியா

மக்களவை நெறிமுறைகள் குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்

DIN


மக்களவையின் நெறிமுறைகள் குழுத் தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவையில் நெறிமுறைகளுக்கு எதிராக எம்.பி.க்கள் நடந்து கொண்டால், தானாக முன்வந்து அவர்களை விசாரிக்கும் அதிகாரம் நெறிமுறை குழுவுக்கு உள்ளது. நெறிமுறை தவறி நடந்து கொண்ட எம்.பி.க்கள் மீது புகார் வந்தால் அதை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அந்த குழுவுக்கு உண்டு.
மக்களவையின் நெறிமுறைகள் குழுவின் தலைவராக எல்.கே. அத்வானியை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் புதன்கிழமை நியமித்தார். மேலும், அவை அமர்வுகளில் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதது தொடர்பான விவகாரத்தை விசாரிக்கும் குழுத் தலைவராக பி. கருணாகரன் மீண்டும் நியமிக்கப்பட்டார். அரசு உறுதிமொழிக் குழு தலைவராக ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நியமிக்கப்பட்டுள்ளார். கீழ்நிலை சட்டக் குழுவின் தலைவராக திலிப் குமார் மன்சுக்லால் நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT