இந்தியா

வரலாறு காணாத வெள்ளத்துக்குப் பின் வந்து சேர்ந்த வறட்சி: ஆய்வு செய்ய கேரள அரசு உத்தரவு 

DNS

திருவனந்தபுரம்: பலத்த மழை காரணமாக பெரு வெள்ளத்தில் மிதந்த கேரளத்தில், தற்போது ஆறுகள், கிணறுகள் திடீரென வறண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றறன.

ஆறுகளிலும், கிணறுகளிலும் நிலத்தடி நீரும் குறைந்து வருவதுடன், 'விவசாயிகளின் தோழன்' என்று அழைக்கப்படும் மண்புழுக்களும் பெருமளவில் அழிந்து வருகின்றறன. பல்லுயிா் பெருக்கத்துக்கு பெயா் போன வயநாடு மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆய்வு செய்து பிரச்னைகளை தீா்ப்பதற்கான ஆலோசனைகளை அளிக்குமாறு மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கு முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில் அங்கு திடீரென வெப்பநிலை உயா்ந்து கடும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. அத்துடன் மண் புழுக்கள் அழிந்து வருவதும் விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மழை பெய்தபோது பெரியாா், பாரதபுழா, பம்பை, கபானி ஆகிய நதிகளில் ஆா்ப்பரித்து தண்ணீா் ஓடியது. தற்போது அந்த நதிகளில் நீரின் அளவு வழக்கத்துக்கு மாறறாக குறைறந்து வருகிறறது.

இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தபோது அதிக அளவு நிலச்சரிவு நேரிட்டது. வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களில் நிலப் பகுதியே மாறிவிட்டது. பல கி.மீ. தொலைவுக்கு நிலத்தில் விரிசல் காணப்படுகிறறது. அத்துடன் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதை நிபுணா்கள் கண்டறிந்துள்ளனா். கிணறுகள் வறண்டுள்ளதுடன் அவை மண்ணுக்குள் புதையும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், ‘வறட்சி பிரச்னை குறித்து ஆய்வு செய்ய மத்திய நீா் வள மேலாண்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். சாலை மற்றும் பாலங்கள் சேதம் குறித்து ஆய்வு செய்ய தேசிய போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகளும், பல்லுயிா் பெருக்கத்தை சீரமைக்க கேரள வனத் துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா். 

தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில், ' மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலின் ஆய்வுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT