இந்தியா

டிசம்பர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

தினமணி

தேவஸ்தான இணையதளத்தில் டிசம்பர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள், முன்பதிவிற்காக வெளியிடப்பட்டுள்ளன.
 மாதந்தோறும் அடுத்த 90 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் ரூ.300 மதிப்பிலான விரைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் விரும்பும் நாட்களில் விரும்பும் நேரத்தில் ஏழுமலையான் தரிசனத்தை முன்பதிவு செய்கின்றனர். தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் நாட்களில் வாடகை அறை தேவைப்படுவோரும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது.
 இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 மதிப்பிலான விரைவு தரிசன டிக்கெட்டுகள் கடந்த 11ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அவற்றைப் பெற விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலமும், தேவஸ்தான இ-தர்ஷன் கவுன்ட்டர்கள் மற்றும் அஞ்சலகங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT