இந்தியா

மலையாள நடிகர் கேப்டன் ராஜு காலமானார்

DIN

பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜு (68) உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானார்.
அவருக்கு மனைவி பிரமிளா, மகன் ரவிராஜ் ஆகியோர் உள்ளனர். 
ராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், கலை ஆர்வத்தால் நண்பர்களுடன் சேர்ந்து மும்பையில் நாடகக் குழு அமைத்து நாடகங்களில் நடித்து வந்தார். 1980- இல் ரத்தம்' என்ற மலையாள படத்தின் மூலம் திரைப்பட நடிகரானார். கடந்த 37 ஆண்டுகளில் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
விக்ரம் கதாநாயகனாக நடித்த இதா ஒரு சினேக கதா ' என்ற மலையாள படத்தை இயக்கி இயக்குநராகவும் தனி முத்திரை பதித்தார்.மேலும் வில்லனாக நடித்தும் புகழ் பெற்றவர். தர்மத்தின் தலைவன், சூரசம்ஹாரம் , ஜீவா , என் ஜீவன் பாடுது, ராஜகுமாரன் ஆகியவை தமிழில் அவரது முக்கிய படங்களாகும். மறைந்த நடிகரின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை கொச்சியில் நடைபெற்றன.
கேப்டன் ராஜுவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT