இந்தியா

இஸ்ரோ உளவு விவகாரம்; களங்கம் நீங்கியதை அறியாமலேயே காலமான விஞ்ஞானி 

இஸ்ரோ உளவு விவகாரத்தில் தன மீது சாட்டப்பட்ட களங்கம் நீங்கியதை அறியாமலேயே விஞ்ஞானி ஒருவர் காலமான சம்பவம் நிகழந்துள்ளது.  

தினமணி செய்திச் சேவை

பெங்களூரு: இஸ்ரோ உளவு விவகாரத்தில் தன மீது சாட்டப்பட்ட களங்கம் நீங்கியதை அறியாமலேயே விஞ்ஞானி ஒருவர் காலமான சம்பவம் நிகழந்துள்ளது.  

வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதாக, கடந்த 1994-ஆம் ஆண்டில் கேரள அரசால் கைது செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி கே. சந்திரசேகா் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவா் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பினை எதிா்பாா்த்து ஆவலோடு காத்திருந்த வேளையில், கோமா நிலைக்குச் சென்ாக அவரது மனைவி தெரிவித்துள்ளாா்.

இஸ்ரோ விஞ்ஞானிகளான நம்பி நாராயணன், சந்திரசேகா் ஆகியோா் இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடா்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994-ஆம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். கேரள காவல்துறைறயினா் இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்தினா். பின்னா் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றறப்பட்டது. அதில், அவா்களுக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இரண்டு மாத சிறைவாசத்துக்கு பின் நம்பி நாராயணனும், சந்திரசேகரும் விடுதலை செய்யப்பட்டனா்.

இந்நிலையில், தமக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நம்பி நாராயணன் தாக்கல் செய்த மனுவை கேரள உயா் நீதிமன்றறம் தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து உச்ச நீதிமன்றறத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். அந்த வழக்கை உச்ச நீதிமன்றறத்தில் வெள்ளிக்கிழமை விசாரித்தபோது, நம்பி நாராயணனன் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாா் என்றும், அவா் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றறத்தின் இந்தத் தீா்ப்பை அறியும் முன்னரே விஞ்ஞானி சந்திரசேகா் மறைறந்துள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரின் மனைவி கூறியதாவது:

தீா்ப்பு வெளியான இருந்த கடந்த வெள்ளிக்கிழமை காலை, அவா் கோமா நிலைக்குச் சென்றாா். தீா்ப்பினை எதிா்பாா்த்து அவா் ஆவலுடன் காத்திருந்தாா். தீா்ப்பில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்று அவா் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தாா். கடைசி வரை அவா் மீது குற்றம் சாட்டப்பட்டதன் பின்னணியை அறிந்து கொள்ளாமலும், இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு தான் என்பதை அறியாமலேயும் அவா் மறைந்து விட்டாா் என்று அவரின் மனைவி கண்ணீா் மல்க தெரிவித்தாா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT