இந்தியா

ரூ.8 கோடி கறுப்புப் பணம்: கர்நாடக அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு

ANI

ரூ.8 கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டது தொடர்பாக பணமோசடி பிரிவில் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் மீது அமலாக்கத்துறை செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், சுனில் சர்மா, ஆஞ்சநேயா, ராஜேந்திரா ஆகியோருக்குச் சொந்தமான ரூ.8 கோடியே 54 லட்சத்து 66 ஆயிரத்து 100  தில்லியில் உள்ள அமைச்சர் சிவகுமாருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் பறிமுதல் செய்யப்பட்டது.

வருமானவரித்துறை எடுத்த இந்த நடவடிக்கையின் அடிப்படையில் சிவகுமார் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும் அமைச்சர் சிவகுமாருக்கு ரூ.1 லட்சம் பத்திரம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் சமர்பித்து நீதிமன்றம் பிணை வழங்கியது. மற்ற மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரத்துக்கு பிணை வழங்கியது.

இந்நிலையில், பணமோசடி செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை கர்நாடக அமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட 3 பேரின் மீதும் செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT