இந்தியா

இறக்குமதி மணல்: தமிழக அரசிடம் பணம் இல்லை என்பதை நம்ப முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

DIN


புது தில்லி: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை கட்ட அவகாசம் கேட்ட தமிழக அரசிடம் பணம் இல்லை என்பதை நம்ப முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தனியார் நிறுவனத்தால் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மணலுக்கான முழுத் தொகையான ரூ.11.27 கோடியை உடனடியாக செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அரசிடம் பணம் இல்லை என்றும், 8 வார கால அவகாசம் வேண்டும் என்றும் தமிழக வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு, இறக்குமதி மணல் வாங்க தமிழக அரசிடம் பணம் இல்லையா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  அதற்கு, தமிழகம் மட்டுமில்லை மற்ற மாநிலங்களிலும் பணமில்லாத நிலையே காணப்படுவதாக தமிழக அரசு வழக்குரைஞர் கூறினார்.

இதைக் கேட்டு, தமிழக அரசிடம் பணம் இல்லை என்பதை நம்ப முடியுமா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டனர். 

வெளிநாட்டு மணலை வாங்கும் விவகாரத்தில், பணம் செலுத்த தமிழக அரசு 2 மாத கால அவகாசம் கோரியதை ஏற்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், 55 டன் இறக்குமதி மணலுக்கான ரூ.11.27 கோடியை தமிழக அரசு ஒரு வாரத்தில் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒரு வாரத்துக்குள் செலுத்தினால் வட்டியில்லாமல் செலுத்தலாம். அவ்வாறு கட்டத் தவறினால் நீதிமன்றத்தில் வட்டியோடு செலுத்த வேண்டியது வரும் என்றும் கூறினர். மேலும் மணலுக்கு துறைமுக வாடகை, மணலுக்கான ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றையும் தமிழக அரசு தான் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட தமிழக வழக்குரைஞர், இறக்குமதி மணலை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதாக வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை முடித்த பிறகே மணலை விற்பனை செய்ய அனுமதிக்க முடியும் என்று கூறிவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT