இந்தியா

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு

DIN

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 166 பேர் பயணிகளுடன் இன்று காலை மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி புறப்பட்டது. விமான புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஒரே சமயத்தில் தலைவலி ஏற்பட்டதோடு மூக்கு மற்றும் காது வழியாக ரத்தமும் கசிந்தது. இதனால் விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணிகள் அனைவரும் உடனடியாக மும்பை விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் இயக்கியதே இத்தகைய பாதிப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT