இந்தியா

ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் 30 நாட்களில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

ANI

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பேர் பயணிகளுடன் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வியாழக்கிழமை காலை புறப்பட்டது. அப்போது சில நிமிடங்களில் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

30-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தலைவலி ஏற்பட்டதோடு மூக்கு மற்றும் காது வழியாக ரத்தமும் கசிந்தது. இதனால் விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணிகள் அனைவரும் உடனடியாக மும்பை விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் இயக்கியதே இத்தகைய பாதிப்புக்கு காரணம்.

இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், இவ்விவரம் அறியப்பட்டவுடன் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் விமானப் போக்குவரத்து விபத்து தடுப்புக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பாதுகாப்பு தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்த அறிக்கை அடுத்த 30 நாட்களுக்குள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. இதில் நடைபெற்ற தவறு கண்டறியப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT