இந்தியா

ராமர் கோயில் விவகாரத்தில் மோடி பின்வாங்குகிறார்: பிரவீன் தொகாடியா

DIN


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு விதியை( 370) நீக்குவது ஆகிய விவகாரங்களில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியில் இருந்து பிரதமர் மோடி பின்வாங்குகிறார் என்று தீவிர ஹிந்துத்துவ ஆதரவாளர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த பிரவீன் தொகாடியா, பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தலைவர்களையும் அவ்வப்போது விமர்சித்து வருகிறார்.
பதானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:
நாட்டில் உள்ள விவசாயிகளும், இளைஞர்களும் கடும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். எல்லையில் வீரர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ராமர் கோயில், அரசியலமைப்பு விதி 370, தேசியவாதம் ஆகிய காரணங்களுக்காகத்தான் மோடியை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவர் கோயிலுக்கு செல்வதற்கு பதிலாக மசூதிக்கு செல்ல ஆரம்பித்து விட்டார். ராமர் கோயில் பற்றி மறந்து விட்டார். மேலும், எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புக்காக பணியாற்றாமல், அவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை விடுதலை செய்யுமாறு கூறியுள்ளார். மோடியை ராமர் கோயில் கட்டுவதற்காக வழக்குரைஞராக அனுப்பினோம். ஆனால் அவர் முஸ்லிம்களின் மனைவிகளது வழக்குரைஞராக மாறி விட்டார். அண்மையில் முத்தலாக் அவசரச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், எல்லையில் நடக்கும் பிரச்னைகளை சமாளிக்க 56 அங்குல மார்பு போதும்' என்று பேசிய மோடி தற்போது அமைதி காத்து வருகிறார் என்று தொகாடியா கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT