இந்தியா

கன மழையால் அபாய நிலையில் யமுனை; தில்லிக்கு எச்சரிக்கை

கன மழை காரணமாக ஹரியானாவின் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் யமுனை நதி அபாய அளவை எட்டியுள்ளது.

IANS


புது தில்லி: கன மழை காரணமாக ஹரியானாவின் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் யமுனை நதி அபாய அளவை எட்டியுள்ளது.

உத்தரகாண்ட், ஹிமாச்சல், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக இம்மாநிலத்தில் பாயும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

யமுனையின் அபாய அளவு என்பது 204 மீட்டராகும். தற்போது யமுனை 204.83 மீட்டர் அளவில் பாய்கிறது.

யமுனை அபாய அளவை தாண்டி பாய்வதால், தில்லியில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தில்லி தலைமைச் செயலர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

தொடர்ந்து அபாய அளவைத் தாண்டிப் பாயும் யமுனை நதியால் தில்லியில் கரையோரப் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT