இந்தியா

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் அனைவரும் விடுதலை: கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பு

DIN


கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்படுவதாக கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பனால் கடந்த 30.07.2008ம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட ராஜ்குமார், 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 14 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் வீரப்பன் உட்பட 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையின் போது ஒருவர் உயிரிழக்க, ஒருவர் தலைமறைவாகவே உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, குற்றத்தை நிரூபிக்கும் வகையில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT