இந்தியா

பாரதமாதா படத்தை வைத்திருப்பது மட்டும் ஒருவரை தேசப்பற்றுள்ளவர் ஆக்காது: வெங்கய்ய நாயுடு 

வெறுமனே பாரதமாதா படத்தை வைத்திருப்பது மட்டும் ஒருவரை தேசப்பற்றுள்ளவர் ஆக்காது என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துளளார். 

IANS

பனாஜி: வெறுமனே பாரதமாதா படத்தை வைத்திருப்பது மட்டும் ஒருவரை தேசப்பற்றுள்ளவர் ஆக்காது என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துளளார். 

கோவாவின் பனாஜி நகரில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலே சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தேசப்பற்று என்பது வெறுமனே பாரதமாதா படத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களை மறந்து  விடுவதோ அல்லது அவர்களை மோசமாக நடத்துவதோ அல்ல. நீங்கள் எல்லோரையும் மரியாதையுடன், அன்புடன் மற்றும் பாசத்துடன் நடத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையான தேசப்பற்றுள்ளவராக இருக்க முடியும். 

நீங்கள் மற்றவர்களிடம் மதத்தின் பேரிலோ, பிராந்தியத்தின் பேரிலோ அல்லது மொழியின் பேரிலோ வேறுபாடு காட்டுவீர்கள் என்றால், நீங்கள் தேசியவாதி கிடையாது. 

அதுதான் இந்தியாவின் சிறப்பம்சம். எந்த ஜாதியாக இருந்தாலும், சமயமாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் அல்லது பிராந்தியத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியா என்பது ஒன்றுதான். ஒரு நாடு.. ஒரே மக்கள்.. உங்கள் அனைவருக்கும் அந்த உணர்வு இருந்தாக வேண்டும். அதுதான் தேசப்பற்று. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

SCROLL FOR NEXT