இந்தியா

ஹெச்-1பி விசா மோசடி: 3 இந்திய-அமெரிக்கர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

DIN


வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்கு உதவும் ஹெச்-1பி விசா விண்ணப்பத்தில் முறைகேடு செய்ததாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சட்டத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கலிஃபோர்னியா மாகாணத்தின் சான்டாகிளாரா நகரைச் சேர்ந்த கிஷோர் தட்டாபுரம், அதே மாகாணத்தின் சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த சந்தோஷ் கிரி, டெக்ஸாக் மாகாணத்தின் ஆஸ்டின் நகரைச் சேர்ந்த குமார் அஸ்வபதி ஆகியோர் நானோசெமன்டிக்ஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
அந்த நிறுவனத்தின் மூலம், வெளிநாட்டுப் பணியாளர்களை ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தும் பணியை அவர்கள் செய்து வந்தனர்.
ஹெச்-1பி விசா வழங்குவதில், அமெரிக்க நிறுவனத்தில் ஏற்கெனவே வேலை தயாராக இருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தி, அத்தகைய விசாவுக்கான விண்ணப்பத்தில் தங்களது வாடிக்கையாளருக்கு ஏற்கெனவே வேலை கிடைத்துவிட்டதாக தவறான தகவலை அந்த மூவரும் குறிப்பிட்டு வந்தனர்.
மேலும், வேலை அளித்ததாக ஒப்புக் கொள்வதற்காக, குறிப்பிட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அவர்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர். அத்துடன், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பொய்களை பாதுகாக்கும் வகையில் விசா அதிகாரிகளிடம் பதிலளிக்கும் வகையில் விண்ணப்பதாரர்களுக்கு அந்த மூவரும் பயிற்சி அளித்து வந்தனர்.
இந்த முறைகேடு மூலம், நியாயமாகச் செயல்பட்டு வரும் பிற ஆலோசனை நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிக ஹெச்-1பி விசாவை நானோசெமன்டிக்ஸ் மூலம்  கிஷோர் தட்டாபுரம், சந்தோஷ் கிரி, குமார் அஸ்வபதி ஆகிய மூவரும் பெற்றுத் தந்துள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக, கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு எதிராக கலிஃபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT