இந்தியா

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு.. பிரதமர் மோடியின் பெருமிதப் பேச்சு

அருணாச்சலப் பிரதேச மாநிலம் பாசிகாட்டில் இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைத்திருப்பதாகக் கூறினார்.

DIN


பாசிகாட்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் பாசிகாட்டில் இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைத்திருப்பதாகக் கூறினார்.

பாசிகாட்டில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தற்போது மின்சார வசதி கிடைத்துவிட்டது. 

நான் கடந்த 2014ம் ஆண்டு இங்கு வந்தேன். அப்போது இது வெறும் நிலமாக இருந்தது. ஆனால் தற்போது இது அழகான விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. அதனால், இப்பகுதியில் இருந்து சிறந்த கால்பந்து வீரர்கள் உருவாகி வருகிறார் என்று பிரதமர் மோடி கூறினார்.

அருணாச்சலப்பிரதேச மக்கள் அளித்த ஆதரவினால் இங்கு சாலை மற்றும் நெடுஞ்சாலை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையும், விமானத் துறையும் நன்கு மேம்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையே காரணம் என்று மோடி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT