இந்தியா

பிரசாரத்துக்கு முன் பாபநாசத்தில் ராகுல் பூஜை: கேரளா காங்கிரஸ்

வயநாடு பிரசாரத்துக்கு முன் பாபநாசம் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பூஜை செய்ய வாய்ப்புள்ளதாக கேரள காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ANI

வயநாடு பிரசாரத்துக்கு முன் பாபநாசம் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பூஜை செய்ய வாய்ப்புள்ளதாக கேரள காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா கூறுகையில்,

பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது அஸ்தியின் ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் ஆற்றில் கரைக்கப்பட்டது. அச்சமயம் அப்போதைய கேரள முதல்வர் கே. கருணாகரன், முல்லபல்லி ராமச்சந்திரன் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் அந்த அஞ்சலியை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர் என்றார். 

இந்நிலையில், வயநாடு பிரசாரத்தை தொடங்கும் முன்பு பாவங்களைப் போக்கும் பாபநாசம் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கேரள காங்கிரஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

SCROLL FOR NEXT