முகப்பு
இந்தியா

கருணாநிதியை 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி

திமுக தலைவர் கருணாநிதியை தனது சுயநலத்துக்காக 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:


நீலகிரி: திமுக தலைவர் கருணாநிதியை தனது சுயநலத்துக்காக 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி தொகுதியில் இன்று அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் முதல்வர் பழனிசாமி.

அப்போது அவர் கூறியதாவது, அரசியலில் தனக்கு முக்கியத்துவம் ஏற்பட வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின். கருணாநிதிக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவர் நன்றாகப் பேசியிருப்பார். இதனை நாங்கள் சொல்லவில்லை, அவரது கட்சியினரே சொல்கிறார்கள். 

கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என்று பழனிசாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →