ஹைதராபாத்தில் சொகுசு காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.8 கோடி பறிமுதல்: 7 பேர் கைது
ஹைதராபாத்தில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸாரும் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 8 கோடியை பறிமுதல் செய்தனர்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸாரும் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ. 8 கோடியை பறிமுதல் செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் முக்கிய சாலைகளில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டர்.
அதில் ஒரு காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த கட்டுக்கட்டான ரூ. 2 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்ய பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வங்கிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 5 பேரிடம் இருந்த ரூ. 6 கோடியையும் பறிமுதல் செய்தனர்.
Advertisement
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், சொகுசு கார்கள் மற்றும் காரில் வந்த 7 பேரையும் கைது செய்து இவ்வளவு பெரிய ரொக்கப்பணம் எங்கிருந்து, எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பணத்துக்கு உரியவர்கள் யார்?, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யவதற்காக கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணங்களில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.