இந்தியா

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கதேச நடிகர் பிரசாரம்: விசாவை ரத்து செய்தது மத்திய அரசு

DIN


திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வங்கதேச நடிகர் பிரசாரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், அவரது விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய-வங்கதேச எல்லைப் பகுதிக்கு அருகேயுள்ள ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கன்னையாலால் அகர்வாலை ஆதரித்து, வங்கதேச நடிகர் ஃபெர்டூஸ் அகமது, இந்திய நடிகர்கள் சிலருடன் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், ஃபெர்டூஸ் அகமது, விசா நிபந்தனைகளை மீறினாரா என்பது குறித்து வெளிநாட்டவர் பதிவு அலுவலரிடம் மத்திய அரசால் விரிவான அறிக்கை கோரப்பட்டது. அவர் தாக்கல் செய்த அறிக்கையில், ஃபெர்டூஸ் அகமது பிரசாரத்தில் ஈடுபட்டதும், விசா நிபந்தனைகளை மீறியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது விசாவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
ஃபெர்டூஸ் அகமது, தொழில் விசாவைப் பெற்று இந்தியா வந்ததாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டவர் பதிவு அலுவலரே அந்தப் பகுதிக்கான விசா வழங்கும் அலுவலர் ஆவார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு அவரிடம் அறிக்கை கோரியது. அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT