மறுக்கப்பட்ட நிதியுதவி: முழுமையாக சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ்
புதிதாய் முதலீட்டாளர்கள் யாரும் நிதியுதவி அளிக்க மறுத்து விட்ட காரணத்தால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முழுமையாக சேவையை நிறுத்தி விட்டது.
புது தில்லி: புதிதாய் முதலீட்டாளர்கள் யாரும் நிதியுதவி அளிக்க மறுத்து விட்ட காரணத்தால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முழுமையாக சேவையை நிறுத்தி விட்டது.
சமீப காலமாக கடன் சுமையால் பாதிப்படைந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் படிப்படியாக தனது சேவையை துண்டிக்க தொடங்கியது. ஒருகட்டத்தில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்த நிலையில், அந்த நிறுவனம் வங்கிகளிடம் கடன் கோரியது.
ஆனால் அது கேட்ட முதல்கட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதைத்த தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
மும்பையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸுக்கு செல்லும் விமான சேவைதான் கடைசியாக இருக்கும் என அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 5 விமானங்களை மட்டுமே அந்த நிறுவனம் இயக்கி வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.