இந்தியா

நேரு காலத்தில் இருந்தே வறுமையை ஒழிப்பதாக காங்கிரஸ் கூறி வருகிறது: நிதின் கட்கரி

DIN


வறுமை ஒழிக்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை ஜவாஹர்லால் நேரு காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக கூறி வருகின்றனர் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை வேரறுப்பதன் மூலமாக நாட்டை பாதுகாப்பானதாக வைத்திருக்கவும், விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தவும், ஏழ்மைக்கு முடிவு கட்டவும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார்.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதாவது:
நாடு விடுதலை அடைந்ததில் இருந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ்தான் ஆட்சி செய்திருக்கிறது.  ஜவாஹர்லால் நேரு தொடங்கி அக்கட்சியில் 4 தலைமுறைகளாக இருந்த தலைவர்கள் வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், அவையெல்லாம் பொய்யாகின.
நேருவுக்குப் பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமரானார். வறுமை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த அவர் 20 அம்ச திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை என்றார் கட்கரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT