இந்தியா

ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கு: இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

அதிமுக்கிய நபர்கள் பயணம் செய்வதற்காக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைதான இடைத்தரகர் சுசென் மோகன் குப்தாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சுசென் மோகன் குப்தாவின் நீதிமன்ற காவல் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அப்போது, ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் மோகன் குப்தா.
எனினும், சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
சுசென் மோகன் குப்தாவை கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்தது.
ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு கடத்தி கொண்டுவரப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட ராஜீவ் சக்úஸனாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சுசென் மோகன் குப்தா கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT