முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் வாக்குச்  சாவடி அருகே கையெறி குண்டு வீச்சு! (விடியோ) 

மேற்கு வங்கத்தில் வாக்குச்  சாவடி அருகே கையெறி குண்டு வீசப்பட்ட விவகாரத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Updated On : 23 ஏப்ரல், 2019 at 4:14 PM
பகிர்:

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வாக்குச்  சாவடி அருகே கையெறி குண்டு வீசப்பட்ட விவகாரத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

நாடு முழுவதும் எழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் மூன்றாவது கட்டமாக 116 தொகுதிகளுக்கு செவ்வாயன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளும் அடக்கம்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்குச்  சாவடி அருகே கையெறி குண்டு வீசப்பட்ட விவகாரத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Advertisement

அங்குள்ள முர்ஷிதாபாத் மாவட்டம்  ராணிநகரில் உள்ள வாக்குச் சாவடி எண்கள் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. முகங்களை மறைத்துக் கொண்ட ஐந்து இளைஞர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாக்குச் சாவடிக்கு அருகில் கையெறி குண்டுகளை வீசுகின்றனர். அவை அனைத்தும் நாட்டு வெடிகுண்டுகளாகும், இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருந்த போதிலும் அங்கு தொடந்து பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.