இந்தியா

ஒடிஸாவில் ஒரு விநோதம்: சிவனையும், பார்வதியையும் அண்ணன்- தங்கையாக வழிபடும் கிராமம்

ஒடிஸாவின் மலைக் கிராமமான கோராபுட் கிராம மக்கள் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் அண்ணன் - தங்கையாக வழிபட்டு வரும் விநோத விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ENS


ஜெய்போர்: ஒடிஸாவின் மலைக் கிராமமான கோராபுட் கிராம மக்கள் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் அண்ணன் - தங்கையாக வழிபட்டு வரும் விநோத விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிர்லிகும்மா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வனதுர்கா குகைக்குள் இருக்கும் சிவன் - பார்வதி சிலையை அண்ணன் - தங்கையாக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.

இதற்கு பெரிய புராண விஷயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், ஒரு சில மூத்த நபர்கள் கூறுகையில், ஒரு முறை சிவனும் பார்வதியும் அண்ணன் தங்கையாக பிறக்க எண்ணி, இங்குள்ள குகையில் வாழ்ந்து வந்த தம்பதியின் வயிற்றில் பிறந்தனர். இருவரும் வளர்ந்து ஆளானதும், சிவன் தவம் செய்ய வனத்துக்குச் சென்றுவிட்டார். பார்வதி பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாக புராணங்கள் கூறுவதாகத் தெரிவித்தனர்.

இதையொட்டியே இங்கிருக்கும் சிவனையும், பார்வதியையும் அண்ணன் - தங்கையாக வழிபடுகிறோம் என்கின்றனர்.

எங்களது மூதாதையர் இந்த வழக்கத்தைக் கொண்டிருந்ததால் நாங்களும் அதையே கடைப்பிடிக்கிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT