இந்தியா

தேசவிரோதிகள் மட்டுமே திக்விஜய் சிங்குக்காக பிரசாரம் செய்வார்கள்: சிவ்ராஜ் சிங் சௌஹான்

பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே நிலையான அரசை உருவாக்க முடியும் என்று ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார். 

IANS

பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே நிலையான அரசை உருவாக்க முடியும் என்று ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்தியப்பிரதேசத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே நிலையான அரசை உருவாக்க முடியும். தேசப் பாதுகாப்பும், மக்கள் நலத்திட்டங்களும் மட்டும் இந்த தேர்தலில் முக்கியப் பங்காற்றப்போகிறது. 

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டதில் இருந்து இம்மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் முடங்கிவிட்டது. இதை தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்திருக்கக் கூடாது என்று தற்போது வருந்துகின்றனர்.

எனவே இங்கு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களித்து காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய் பிரசாரங்களை செய்து வருகிறது. ஆரோக்கியமாக சிந்திக்கும் திறனை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் முற்றிலும் இழந்துவிட்டார். அதுவே அவர்களின் பிரசாரங்களிலும் வெளிப்படுகிறது. அதற்காக நான் வருந்துகிறேன். மக்களும் அதனை பெரிதுபடுத்தமாட்டார்கள்.

தேச விரோத சிந்தனை மற்றும் கருத்துக்களை உடையவர்கள் தான் திக்விஜய் சிங்குக்காக பிரசாரம் செய்து வருகிறார்கள். ஏன் இவர்களைப் போன்றவர்கள் மட்டும்தான் திக்விஜய் சிங்கிடம் உள்ளார்களா என்பதும் தெரியவில்லை என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT