இந்தியா

பாஜக அரசால் எதையுமே கட்டமைக்க முடியாது: ராகுல் காந்தி

DIN


பாஜக அரசால் எதையுமே கட்டமைக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் சாடியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் ஜிஃப் (GIF) புகைப்படம் ஒன்றை இணைத்து, "பாஜக அரசால் எதையும் கட்டமைக்க முடியாது. பல பத்து ஆண்டுகளாக கடின உழைப்பில் உருவாக்கப்பட்டதை சீரழிக்கத்தான் செய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள ஜிஃப் புகைப்படத்தில், 1.98 லட்சம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎம்எல் ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் நிறுத்திவைப்பு, 3 லட்சம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது குறித்து ரயில்வே திட்டம், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறையில் ஜீலை மாதம் விற்பனை சரிவு, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறித்து எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் ஏஎம் நாயக் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT